பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1._தமிழின்-நிலை - B2 நாடெங்கும் உலகெங்கும் பரவி வருகிறது. தமிழ் சினிமா (இயல் இசை நாடகம்) இந்திய நாட்டில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. தமிழ்க் கலைஞர்கள் உலகப் புகழ் பெற்றிருக்கிறார்கள். தமிழ் நாட்டின் சிற்பக்கலை உலகப் புகழ் பெற்று வருகிறது. தமிழ் மொழி செம்மொழியாக இந்திய அரசால் அறிவிக்கப் பட்டிருக்கிறது. விரைவில் நாடு முழுவதிலும் உலகம் முழு -வதிலுமுள்ள பல பல்கலைக் கழகங்களிலும் தமிழ் மொழி இடம் பெறும். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்திருக்கிறது. ஆயினும் தமிழ் மொழி அதன் உரைநடை, அதன் கவிதைகள், காவியங்கள், அதன் இசை, பாடல்கள், அதன் நுட்பமான கலை அதன் இலக்கியம் இலக்கணம் தமிழின் தொன்மையான அறிவியல் துறைகள் வைத்திய முறை, மருந்தியல், நீரியல், கட்டிடக்கலை மற்றும் பல துறைச் சாதனைகள் புதுப்பிக்கப்பட வேண்டும். நவீன இன்றைய கால அறிவியல் தொழில் நுட்பக்கலைகள் அனைத்தும் தமிழில் வரவேண்டும். தமிழனாக உள்ள டாக்டர்கள் (வைத்தியர்கள்) என்ஜினியர்கள் (பொறிஇயல் வல்லுனர்கள்) அறிவியல் தொழில் நுட்ப வல்லுனர்கள், விஞ்ஞானிகள், முதலிய அனைவரும் அவர்கள் கற்ற கல்வியை கலைகளை தொழில் நுட்பங்களைப் பற்றிய நூல்களையெல்லாம் தமிழ் மொழியில் கொண்டு வருவதற்கும் தமிழில் கற்பிப்பதற்கும் முயற்சிகள் எடுக்க வேண்டும். அப்பணிகளில் அவர்கள் உதவ வேண்டும். தமிழ் கலைகளையெல்லாம் உலகமெலாம் பரப்புவதற்கு உதவி செய்ய வேண்டும். உலகில் உள்ள வளர்ச்சியடைந்த மொழிகளுக்கு ஈடாகத் தமிழ் மொழியை உயர்த்த வேண்டும்.