பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில்-பாரதியின்-உரைநடை-அ-சீனிவாசன் Bo தமிழ் இலக்கியங்கள் பண்டைய இலக்கியங்களும் சரி, இன்றைய சிறந்த படைப்புகளும் சரி, இதர இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யவும், இதர மொழிகளின் சிறந்த படைப்புகள் தமிழ் மொழியில் கொண்டு வரவும் வேண்டும். அதற்கு தமிழ் அறிஞர்கள் முயற்சிகள் செய்ய வேண்டும். தமிழ் நூல்களும் தமிழ் பத்திரிகைகளும் உலகம் எல்லாம் செல்ல வேண்டும். உலகின் அறிவையெல்லாம் தமிழகத்திற்குக் கொண்டு வர வேண்டும். தமிழகத்தின் அறிவையெல்லாம் உலகம் முழுவதிலும் கொண்டு செல்ல வேண்டும். இன்று தமிழகத்தின் தலை சிறந்த மனித ஆற்றல் உலகமெங்கும் சென்றிருக்கிறது. உலகின் பல பல்கலைக் கழகங்களிலும், நிறுவனங்களிலும் தமிழகத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுடைய ஆற்றல் திறமை நிபுணத்வம் எல்லாம் உலக மக்கள் அனைவருக்கும் பயன் பட வேண்டும். இது பாரதியின் கனவு. அந்த மகாகவியின் கனவுகள் பலிக்க வேண்டும். செயலுக்கு வர வேண்டும். தமிழர்களின் நிலை உயர வேண்டும்.