பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1_3:iուսու 4. பல ஆய்வுகளும் உள்ளன. அந்த ஆய்வுகளுக்குள்ளே நாம் செல்லவில்லை. பாரதியின் பலவேறு துறை தமிழ் உரைநடை பற்றி இந்த நூலில் விரிவுபடக் கூறப்பட்டிருக்கிறது. பாரதியைப் பெரும்பாலும் கவிஞர் என்றுதான் அதிகமாக நாம் அறிவோம், மக்களும் அதிகமாக அவ்வாறேதான் அறிவார்கள். ஆனால் பாரதி கவிதைகளைப் போலவே வீறுகொண்ட பல கட்டுரைகளையும் கதைகளையும் தமிழ் உரைநடையில் எழுதியுள்ளார். பலவேறு அரசியல் கருத்துக்களையும் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களையும் பாரதி தனது உரைநடையில் எழுதியுள்ளார். மக்களை பாதிக்கக் கூடிய, மக்களுடைய வாழ்க்கையுடன் தொடர்புள்ள பலவேறு பிரச்னைகளைப் பற்றியும் பாரதி எழுதியுள்ள கட்டுரைகள் அவருடைய உரைநடைப் பகுதியில் வெளி வந்துள்ளன. அரசியலைப் பற்றி, பலவேறு பொருளாதாரப் பிரச்சனைகளைப் பற்றி சமூக சீர்திருத்தங்களைப் பற்றி பெண்ணுரிமைபற்றி மற்றும் கல்வி, சுகாதாரம், சங்கீதம், தத்துவஞானம், முதலிய பலவேறு பிரச்னைகளைப் பற்றி பாரதி தனது உரைநடையில் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அக்கட்டுரைகள் கதைகள் எல்லாம் மிகப் பெரிய செழுமைமிக்க இலக்கியங்களாகும். பாரதி சுதேசமித்திரன் பத்திரிகையின் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றியுள்ளார், என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அத்துடன் அவர் வேறு சில இதழ்களையும் தொடங்கி தனது நண்ப்ர்களின் உதவியுடன் அவைகளை நடத்தியுள்ளார். அவைகளில் முக்கியமாக இந்தியா, கர்மயோகி, சக்கரவர்த்தினி, விஜயா முதலியவை குறிப்பிடத்தக்கவை. அவைகள் மூலமும்