பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

gufig Cunnis susmiš4úlfu பாரதியின்-உரைநடை-அ-சீனிவாசன் B5 "பத்திரிகாதிபரின் கஷ்டங்கள், அதிகமென்று சொன்னேன். இக்காலத்தில் தமிழ் நூலாசிரியர் படுங்கஸ்டங்களை ஈசனே தீர்த்து வைக்க வேண்டும். உண்மையான கவிதைக்குத் தமிழ் நாட்டில் தக்க மதிப்பில்லை. இங்கிலிஷ் பாஷையிலிருந்து கதைகள் மொழி பெயர்க்கப்பட்டுப் போட்டால் பலர் வாங்கி வாசிக்கிறார்கள். அல்லது இங்கிலிஷ் முறையைத் தழுவி மிகவும் தாழ்ந்த தரத்தில் பலர் புது நாவல்கள் எழுதுகிறார்கள். அவர்களுக்குக் கொஞ்சம் லாப மேற்படுகிறது. தமிழில் உண்மையான இலக்கியத் திறமையும் தெய்வ அருளும் பொருந்திய நூல்கள் எழுதுவோர் சிலர் தோன்றியிருக்கிறார்கள். இவர்களுடைய தொழிலை அச்சடிப்பார்கள் இல்லை. அச்சிட்டால் வாங்குவாரில்லை. அருமை தெரியாத ஜனங்கள் புதிய வழியில் ஒரு நூலைக் காணும் போது அதில் ரஸம் அனுபவிக்க வழியில்லை. இங்கிலிஷ் படித்த ஜனத்தலைவர் காட்டும் வழியையே மற்றவர்கள் பிரமாணமென்று நினைக்கும் படியான நிலைமையில் தேசம் இருக்கிறது. இந்தப் பிரமாணஸ்தர்கள் தமிழ் நூல்களில் புதுமையும், வியப்பும் காணுவது சாத்தியமில்லை என்ற நிச்சயத்துடனிருக்கிறார்கள். ஆகவே நூலாசியர் தமக்கு தெய்வம் காட்டிய தொழிலிலே மேன்மேலும் ஆவலுடன் பாடுபட வழியில்லாமல் வேறு தொழில் செய்யப் போய் விடுகிறார்கள். "ஆகையால் இங்கிலிஷ் படித்த தமிழ் மக்கள் முக்கியமாக வக்கீல்களும், பள்ளிக்கூடத்து வாத்தியார்களும் தமது வாக்கிலும் மனதிலும் தமிழரசியைக் கொலுவிருக்கும் படி செய்து வணங்க வேண்டும் என்றும் அதுவே இப்போதுள்ள ஸ்திதியில் தமிழ் வளர்ப்புக்கு மூல ஸாதனமாகுமென்றும் அறிக்கையிட்டுக் கொள்கிறேன்” என்று பாரதி எழுதியுள்ளார்.