பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. தமிழ்ப் பத்திகைகள் இதழ்கள்) BE தமிழ் உரைநடை வளர்ச்சியில் பத்திரிகைகளின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை பாரதி வலியுறுத்திக் கூறி வந்துள்ளார். பத்திரிகைகள் என்பது மக்களுடன் நெருக்கமாக உள்ள ஒரு ஊடு சாதனமாகும். பத்திரிகைகளுக்கும் பொது மக்களுக்கும் ஜனத் தலைவர்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்க வேண்டும் என்பது பாரதியின் கருத்தாகும். வக்கீல்கள், ஒய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், டாக்டர்கள், என்ஜினியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் படித்தவர்கள் கிராமத்தலைவர்கள், மக்களுக்கு சேவை செய்யும் பொது நல ஊழியர்கள், அரசியல் அனுபவம் உள்ளவர்கள் ஆகியோர் எல்லாம் பொது வாழ்க்கையில் அனுபவம் மிக்கவர்கள். அவர்கள் எல்லாம், தங்களைச் சுற்றியுள்ள மக்களின் பிரச்னைகளைப் பற்றி தங்களைச் சுற்றி நிகழும் பலவேறு நிகழ்ச்சிகளைப் பற்றி, மற்றும் அரசியல் விமர்சனம், இலக்கிய விமர்சனம், வாணிபம், பொருளாதாரம், தொழில் விவசாயம் பற்றிய பிரச்னைகள், கல்வி சுகாதாரம், விளையாட்டு, கலை, ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகள், விஞ்ஞானச் செய்திகள் மற்றும் இவ்வாறான சமூக முக்கியத்துவம், சமூக அக்கரை நலன் சம்பந்தமான பல செய்திகளை பத்திரிகைகளுக்கு அனுப்ப வேண்டும். அப்போது பத்திரிகைகள் மக்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டதாக இருக்கும். சமூகப் பொதுவாழ்வில் மக்களுடைய ஈடுபாடு அதிகரிக்கும். இதன் மூலம் மக்களுடைய ஜனநாயகச் செயல்பாடுகள் அதிகரிக்கும் என்பது பாரதியின் கருத்தாகும். இத்தகைய வெகு ஜனத் தொடர்பு மிகுந்த பத்திரிகைகளின் செயல் பாடுகள் மொழியின் உரைநடை வளர்ச்சிக்கு பெருந்துணையாக இருக்கும்.