பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில்-பாதியின்-உரைநடை-அ-சீனிவாசன் B7 13. தமிழ் நாட்டில் விழிப்புணர்வு இத்தலைப்பில் பாரதியார் மிகவும் அருமையானதொரு எடுத்துக்காட்டுடன் ஒரு கட்டுரையில் சிறந்த கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். இராமாயணக் கதையில் கும்பகருணன் ஒரு விசித்திரமான பாத்திரமாகும். நீண்ட உறக்கத்திற்கு எடுத்துக் காட்டாகத் தமிழ் இலக்கியங்களில் கும்ப கருணனைப் பற்றிக் குறிப்பிடுவதுண்டு. அது போல திருமாலின் காட்சிகளில் ஒன்று அறிதுயிலும் அனந்த சயனமுமாகும். இத்தகைய உறக்க நிலை நமது நாட்டு மக்களின் பிரதி பலிப்பாகும். இத்தகைய தூக்கத்திலிருந்து நாட்டு மக்களை விழிப்படையச் செய்வதற்காகத் தான் பாவைப் பாடல்களும் பள்ளியெழுச்சிப் பாடல்களும் நமது இலக்கியங்களில் தோன்றியுள்ளன. பாரதியார் கூட ஆழ்வார்களின் பள்ளியெழுச்சிப் பாடல்களைத் தொடர்ந்து நீண்ட உறக்கத்தில் இருந்த பாரத தேச மக்களை எழுப்புவதற்காக பாரத மாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடியுள்ளார். பாரதியார் தனது உரைநடையில் கும்பகருணனின் உறக்கத்தை எடுத்துக் காட்டித் தமிழ் நாட்டின் விழிப்புக்கு வழி காட்டுகிறார். “கும்பகருணன் துங்கினானாம் இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. ராம-ராவண யுத்தத்திற்கு ராம ராவண யுத்தமே நிகர்” என்று முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப் பட்ட சண்டையின் அதிர்ச்சியிலே கூடக் கும்பகருணனுடைய துக்கம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடு, மாடு, குதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி அவன் மேலே நடக்கச் சொன்னார்கள். தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை