பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13._தமிழ்_நாட்டில்-விழிப்புணர்வு 88 அவன் காதுக்குள்ளே போய் இடி இடிக்கச் சொல்லி இராவணன் கட்டளையிட்டானாம். மேகங்கள் போய் இடித்தனவாம். கும்பகருணனுடைய குறட்டை நிற்கவேயில்லை. மேற்படி கும்ப கருணனைப் போல சில தேசங்கள் உண்டு. அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும் காது கேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சில உண்டு. அந்த தேசங்களிலே வாசம் செய்வோர் மஹா பாவிகள். மாதுர் துரோகம், பிதுர்துரோகம், சகோதரதுரோகம், தெய்வத்துரோகம், சுதேசதுரோகம் முதலிய பெரிய பாதகங்கள் செய்து சீரழிந்த மானுடர் அப்படிப் பட்ட தேசங்களில் வாழ்கிறார்கள். "ஆனால் ஹிந்து தேசம் அப்படி இல்லை. இங்கு தமிழ் நாட்டைப் பற்றி முக்கியமாகப் பேச வந்தோம். தமிழ்நாடு மேற்படி மஹா பாதக ஜாபிதாவைச் சேர்ந்ததன்று அன்று! “இராமலிங்க சுவாமிகளும், சுதேசமித்திரன், சுப்பிரமணிய அய்யரும் இவர்களைப் போன்ற வேறு சில மகான்களும் தமிழ் நாட்டில் புதிய விழிப்புக்கு ஆதிகர்த்தாக்களாக விளங்கினர். ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரைத் தமிழ் நாடு முதலாவது அங்கீகாரம் செய்து கொண்ட பிறகுதான், வங்கம், மகாராஷ்டிரம் முதலிய ஹிந்து தேசத்து மாகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன. விவேகானந்தருடைய எழுச்சி மிக்க ஹிந்து விழிப்புணர்வு உலகத்தையே உலுக்கியது. “பூமண்டலம் முழுவதிலும் பெரிய விழிப்பொன்று வரபோகிறது. அதற்காதாரமாக ஹிந்துஸ்தானம் கண்ணை விழித்து இருபதாண்டுகள் ஆயின. ஹிந்துஸ்தானத்திற்குள்