பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. தமிழ் நாட்டில் விழிப்புணர்வு 90 என்பதைப் பற்றியே சந்தேகங்களுடையது. ஆதலால் தமிழ் படிப்பில்லாமலும் தமிழ் மனமில்லாமலும் சந்தோஷமடைந்திருக்கும் இயல்புடையது” என்று பாரதி எழுதுகிறார். பாரதி காலத்தில் நவீன அறிவியல் (விஞ்ஞானம்) நூல்களெல்லாம் மிகப் பெரும்பாலும் இந்தியாவில் ஆங்கில மொழிகளிலேயே இருந்தன. வைத்தியம் பொறியியல் முதலிய தொழில் நுட்ப சாத்திரங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருந்தன. அத்துடன் சட்டவியல், பொருளியல், வணிகவியல் முதலிய சமூக அறிவியல் கலைகள் பற்றிய நூல்களும், மேல் படிப்பிற்கான நூல்களும் ஆங்கில மொழியிலேயே இருந்தன. இன்றும் கூட பெரும்பாலும் அந்த நிலை நீடிக்கிறது. தமிழில் அறிவியல் நூல்கள் எழுதப்பட வேண்டும் என்னும் கருத்துக்களை பாரதி தனது கட்டுரைகளில் முன் வைத்துள்ளார். பாரதியாரின் இந்தக் கட்டுரைகள் எல்லாம் அக்காலத்திய தமிழ் உரைநடையின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. அதன் பிரபலத்தை உண்டாக்கியிருக்கிறது. "பஞ்ச புதங்களின் இயற்கையைப் பற்றிய ஆராய்ச்சிகளிலே நம்மைக் காட்டிலும் ஐரோப்பியர் முன்னேறி நிற்பது தெரிந்த விஷயம். ஆதலால் ஐரோப்பாவில் வழங்கும் லெளகீக சாஸ்திரங்களைத் தமிழில் எழுத வேண்டும் என்று பல பண்டிதர் மிகவும் ஆவல் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சில பகுதிகளின் ஆரம்பம் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறது. இந்த முயற்சி மேன்மேலும் வளரும். வளர்ந்து தீர வேண்டும். அந்த சாஸ்திரங்களையெல்லாம் ஏக காலத்தில் தமிழில் எழுதி முடிப்பதற்காக ஒரு பண்டித சங்கம் ஏற்படக்கூடும். நமது இராஜாக்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் செட்டிகளுக்கும் நல்ல புத்தியுண்டாகித் தமிழில் நவீன சாஸ்திரம் சேர்ப்பதாகிய காரியத்தை அவர்கள் தக்க பண்டிதர்கள் உதவி கொண்டு