பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில் பாதியின்-உரைநடை-அடசினிவாசன் 91 விரைவில் நிறை வேற்றி மேன்மை பெறக் கூடும்” என்று பாரதி தனது உரைநடைக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். தற்காலத்தில் குறிப்பாக நாடு விடுதலை பெற்ற பின்னர் ஏற்பட்ட வளர்ச்சியில் கல்வி நிலையங்கள் உயர் கல்வி நிலையங்கள் பல்கலைக்கழகங்கள் ஆகியவை எண்ணிக் -கையிலும் தரத்திலும் பலதுறைகளிலும் வளர்ச்சி பெற்றிரு -க்கின்றன. இவைகளில் படித்துப் பட்டம் பெற்றும், ஆராய்ச்சிகள் பல செய்தும் பலவேறு நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றும் நமது நாட்டில் தமிழ் நாட்டிலும் பல்லாயிரக்கணக்கான அறிஞர்களும், விஞ்ஞானிகளும், நிபுணர்களும் ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறார்கள். மனித வளத்துறையில் பாரதமும் உலக நாடுகளின் முன் வரிசையில் உள்ளது. இயற்கை அறிவியல், சமூக அறிவியல் நூல்கள், நமது மொழிகளில் அவ்வகையில் தமிழ் மொழியில் வெறும் மொழி பெயர்ப்பு நூல்களாக இல்லாமல் பாரதப் பாரம்பரியம் கொண்ட அறிஞர்கள் சொந்த அனுபவத்திலிருந்து மூலநூல்களாகவே தமிழ் மொழியிலும் இதர இந்திய மொழிகளிலும் எழுதப்பட்டால் ஒளியும் தெளிவும் ஒட்டமும் வளமும் இருக்கும். இதுவே பாரதியின் கனவும் விருப்பமுமாகும்.