பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திவாகரர் வரலாறு

சேந்தனைப் பற்றி முறையான வரலாறு எழுதி வைக்கப்படவில்லை என்று குறைபட்டுக் கொண்டோம். இருப்பினும், திவாகரர் எழுதி வைத்துள்ள குறிப்புக்களைக் கொண்டு அவனது வரலாற்றை ஓரளவு உருவாக்கிக் கொண்டோம். ஆனல் திவாகரர் வரலாற்றைப் பொறுத்தமட்டும் நமக்கு ஏமாற்றமே காத்துக் கிடக்கிறது. அவரைப் பற்றி ஓரளவாயினும் அறிந்துகொள்வதற்குக்கூட, அவர் நூலோ அல்லது பிறர் நூற்களோ துணை புரியவில்லை. சில நூலாசிரியர்கள் நூலுக்கு முன்னுல் உள்ள பாயிரப் பகுதியில் தம்மைப் பற்றி ஒரு சிறிது உரைத்திருப்பார்கள்; அல்லது நூலாசிரியரைப் பற்றிப் பிறராயினும் பாயிரப்பகுதியில் புகழ்ந்து எழுதியிருப்பார்கள். இந்த இரண்டு நிலைகளுமே திவாகர நிகண்டில் காணப்படவில்லை. ஒருவேளை இருந்து அழிந்துவிட்டிருக்குமோ? இந்நிலை நமது தீப்பேறே. இருப்பினும், திவாகரரைப் பற்றிப் பின்வருமாறு சிறுகுறிப்பு செப்பனிட்டுக் கொள்ளலாம் :-

திவாகரர் முதலில் இல்லறம் நடாத்திப் பின்னர்த் துறவு பூண்ட ஒரு முனிவர். திவாகர முனிவர் அருளிச்செய்த சேந்தன் திவாகரம் என நூலுக்கு முன்னால் எழுதப்பட்டிருப்பதைக் கொண்டு இது புலனுகும். இவர் தஞ்சை மாவட்டத்துச் சேந்தனால் ஆதரிக்கப் பெற்றவர்; அதனுல் இவரும் அந்த வட்டத்தினராக இருக்கலாம். இவர் நன்றி மறவாத பண்பினர் என்பது, தம் நூலின் தொகுதி தோறும்