பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

நூலின் அமைப்பு

திவாகரம் பன்னிரண்டு தொகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன :-

1. தெய்வப் பெயர்த் தொகுதி
2. மக்கள் பெயர்த் தொகுதி
3. விலங்கின் பெயர்த் தொகுதி
4. மரப் பெயர்த் தொகுதி
5. இடப் பெயர்த் தொகுதி
6. பல் பொருள் பெயர்த் தொகுதி
7. செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி
8. பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
9. செயல் பற்றிய பெயர்த் தொகுதி
10. ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
11. ஒருசொல் பல்பொருள் பெயர்த் தொகுதி
12. பல்பொருள் கூட்டத்து ஒருபெயர்த் தொகுதி-

என்பனவாம். தெய்வப் பெயர்த் தொகுதியில் பல்வகைத் தெய்வங்களின் பற்பல பெயர்கள் கூறப்பட்டிருக்கும். இது போலவே மற்ற தொகுதிகளிலும்அவ்வப் பெயர்கள் கூறப்பட்டிருக்கும். தொகுதி என்றாலும் நிகண்டு என்றாலும் கூட்டம் என்றாலும் பொருள் (அர்த்தம்) ஒன்றே. திவாகரத்தில் உள்ள தொகுதி அமைப்புமுறையே பின்வந்த நிகண்டுகளின் அமைப்புக்கும் வழிகாட்டியாகும்.