பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

122



உண்மையான காரியத் தலைவராவார் என்னும் உயர்ந்த பொருளை,

“வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னர்க்கு
உள்படு கருமத் தலைவர்க்கு ஒன்றும்.”

என்னும் நூற்பா உணர்த்துவது மனத்திற்கு நிறைவு அளிக்கின்றதல்லவா?

அடுத்து, ஆரியர் என்றால் உயர்ந்தவர்—மேலானவர் என்று மதிப்பாக எண்ணிக்கொண்டிருக்கும் நம் மனத்தை, ஆரியர் என்றால் விலங்குகள்போல் நாகரிகம் அற்றவர்—தாழ்ந்தவர்—மிலேச்சர் என்னும் பொருள் தருகிற

“மிலேச்சர் ஆரியர்”

என்னும் திவாகர நூற்பா குழப்புகிறதன்றோ?

பழங்காலத்தில் அரேபியா, ரோமாபுரி போன்ற அயலிடங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வதிந்தவர்களை ‘யவனர்’ என்றும் ‘சோனகர்’ என்றும் அக்காலத் தமிழ்மக்கள் அழைத்தனர் என்பதை,

“யவனர் சோனகர்.”

என்னும் நூற்பாவால் அறியலாம். இதிலிருந்து அக்காலத் தமிழகம் எவ்வளவோ சிறப்புற்றிருந்தது என்பது புலனாகும்.

அடுத்துக் கூறப்போகும் பெயர்கள் நுட்பமானவை. ஒருத்தி, கொண்ட கணவனை வஞ்சித்து அவனறியாமல் பிறன் ஒருவனோடு கூடிப்பெற்ற பிள்ளைக்குக் ‘குண்டகன்’ என்று பெயராம். (இந்தக்காலத்தில் குண்டர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இத் தகுதி-