பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

215

பிங்கலத்தின் பெருக்கம் நோக்கிப் பவணந்தியார் அதற்கு முதன்மை கொடுத்திருப்பதின் பொருத்தத் தைப் புரிந்து கொள்ளாத சிலர், திவாகரத்தினும் பிங் கலமே முந்தியது எனப் பிற்காலத்தில் கூறத் தொடங்கிவிட்டனர். இவ்வாறே புலியூர்ச் சிதம்பர ரேவண சித்தரும் தம் அகராதி நிகண்டில் கூறிவிட் டிருக்கிரு.ர்.

திவாகரத்தினும் பிங்கலத்திற்குச் சிலர் முதன்மை கொடுத்துவிட்டதற்கு இன்னெரு பொருட்டும் (கார ணமும்) சொல்லலாம். அதாவது :- திவாகரரால் திவாகாம் தோன்றிய உடனேயே, அவர் மகன் பிங்கல. ரால் பிங்கலம் தோன்றிவிட்டிருக்கவேண்டும். இக் காலம்போல் அச்சு வசதியும் போக்குவரவு வசதியும் இல்லாத எட்டாம் நூற்ருண்டில் ஒரு குடும்பத்தி லிருந்து அடுத்தடுத்துத் தோன்றிய இந்த இரு நிகண் டுகளும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில்தான் (அல்லது சிறிது முன்னும் பின்னுமாக) வெளியுலகில் பரவத். தொடங்கியிருக்கும். அதல்ை, எது முக்தியது - எது பிந்தியது என்று அறிய முடியாத ஒருநிலை - அறிய வேண்டிய தேவையில்லாத ஒரு நிலை ஏற்பட்டிருக்க லாம். ஒருசிலர் திவாகரம் படித்துவந்திருக்கலாம் - ஒரு சிலர் பிங்கலம படித்து வந்திருக்கலாம். ஒரு சில விடங்களில் திவாகரம் பரவி யிருக்கலாம் - ஒரு சில விடங்களில் பிங்கலம் பரவி யிருக்கலாம். ஒரு சிலர்க்கு திவாகரம் உயர்ந்ததாகத் தெரியலாம்- ஒரு சிலர்க்குப் பிங்கலம் உயர்ந்ததாகத் தெரியலாம். இவ்வகையாக நாளடைவில் ஒருசிலர் திவாகரத்திற்கு முதன்மை கொடுத்திருக்கலாம் - ஒருசிலர் பி ங் க ல த் தி ற்கு முதன்மை கொ டுத்திருக்கலாம். இதல்ை, எது முந்தியது