பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

217

என்பதற்கு ஆதிதிவாகரன் என மாற்றிப் பொருள் கொண்டதஞலேயே, சேந்தன் திவாகரரினும் பிங்கலர் முந்தியவர் எனத் திரிபாகக் கூறி விட்டனர். --

ஈண்டுப் பெரும்பாலாரின் கருத்துப்படி ஆராய்ந்து பார்த்ததில், பிங்கலத்தினும் சேந்தன் திவாகரமே முற்பட்டது என்ற முடிவு நமக்குக் கிடைத்துள்ளது. எனவே, பிங்கலர் சேந்தன் திவாகரரின் மகனுவார் என் பதும் தெரியவரும்.

சேந்தன் திவாகரருக்கும் பிங்கலருக்கும் தந்தைமகன் என்ற முடிச்சு போடவேண்டியதில்லை; இவர் வேறு- அவர் வேறு என்று எவரேனும் கூறினும், சேந்தன் திவாகரத்தினும் பிங்கலம் பிந்தியது என்பது வரைக்குமாவது உறுதி.

சேந்தன் திவாகரரின் மகனே பிங்கலர் என்பதை ஒத்துக்கொண்டால், பிங்கலரின் காலமும் எட்டாம் நூற்ருண்டே என்பது பெறப்படும். பதின் மூன்ற்ம் நூற்ருண்டினராய பவணந்தியார் தமது நன்னூலில் பிங்கலத்தைக் குறித்திருப்பதால், பிங்கலம் பதின் மூன்ரும் நூற்ருண்டிற்கு மிகவும் முக்தியது என்பதை எவரும் மறுக்க முடியாது.

சைவ சமயத்தவராகிய சேந்தன் திவாகரரின் மகனே பிங்கலர் என்றல், இவரும் சைவ சமயத்தவர் என்பது பெறப்படும். மேலும், ஆசிரியர், வானவர் பெயர் வகைகளைக் கூறுங்கால், மு. த லி ல் விநாயகரையும் அடுத்துச் சிவன், உமை, முருகன் ஆகியோரையும் கூறி, பின்னரே மற்ற சமயக் கடவுளர்களைப் பற்றிப் பேசி யிருப்பதால், இவர் சைவ சமயத்தவர் என்பது உறுதி.