பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

218

பிங்கல முனிவர் எனச் சுட்டப்படுவதிலிருந்து, வாழ்க்கையின் தொடக்கத்திலோ அல்லது இறுதி யிலோ இவர் துறவு பூண்டிருக்கவேண்டும் என்பதும் தெளிவு.

நூலின் அமைப்பு

பிங்கல நிகண்டு நூலின் முகப்பில் முதலாவதாக,

" தன்தோள் நான்கின் ஒன்று கைம்மிகூஉம்

களிறுவளர் பெருங்கா டாயினும் ஒளிபெரிது சிறந்தன் றளியஎன் நெஞ்சே."

என்னும் பிள்ளையார் வணக்கப் பாடல் காணப்படு கிறது. இதன் கருத்து :- என் உள்ளம், ஐந்து கை களையுடைய பிள்ளையாராகிய யானை தங்கியுள்ள காடாக இருப்பினும், அது மிக்க அறிவொளி வீசி விளங்குகிறது-என்பதாம். இந்தப் பாடலை அடுத்து, சிறப்புப் பாயிரம் என்னும் தலைப்பில்,

" இருங்கடல் உடுத்தஇம் மாநிலம். விளங்க

அரும்பொருள் தெரித்த அகன்தமிழ் வரைப்பின் இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுட் கணிகல தைலிற் செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமல் இசைக்கும் இயற்சொல் ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறு பொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி செந்தமிழ் சேர்ந்த திசைதொறும் திசைதொறும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி