பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

229



பெயர் தெரியா நிகண்டுகள்

திவாகரம், பிங்கலம் ஆகியவற்றின் காலம் எட்டாம் நூற்றாண்டாகும் என்னும் முடிவை ஆராய்ச்சியாளர் சிலர் ஒத்துக்கொள்ளாமல் பத்தாம் நூற்றாண்டு வரைக்கும் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு போகிறார்கள்.

இவ்விரண்டினையும் அடுத்து, கிடைத்திருக்கும் நிகண்டுகட்குள் காலத்தாலும் தரத்தாலும் முதன்மையுடைய சூடாமணி நிகண்டின் காலம் பதினாறாம் நூற்றாண்டாகும் எனச் சிலர் ஆய்ந்து கூறியுள்ள முடிவை வேறு சிலர் ஒத்துக் கொள்ளாமல், பதினான்கு அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டெனச் சில நூற்றாண்டுகள் முன்னுக்கு இழுத்துக்கொண்டு வருகின்றனர்.

எது எப்படி யிருந்தபோதிலும், முன்னர்ப் புகழ் பெற்றிருந்த திவாகரம், பிங்கலம் ஆகியவற்றின் காலத்துக்கும், பின்னர்ப் புகழ் பெற்றிருந்த சூடாமணி நிகண்டின் காலத்துக்கும் நடுவில், இரண்டு மூன்று நூற்றாண்டு காலமோ — அல்லது நான்கைந்து நூற்றாண்டு காலமோ-அல்லது ஏழெட்டு நூற்றாண்டு காலமோ—அதாவது ஒரு சில நூற்றாண்டு காலமாயினும் இடைவெளி யிருந்திருக்கவேண்டும் என்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த இடைவெளிக் காலத்தில் பல நிகண்டுகள் தோன்றியிருக்கக்கூடும். ஆனால் அவை கிடைக்கவில்லை; பெயர்களும் தெரியவில்லை;