பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

230

அந்தோ! அழிந்தொழிந்து மறைந்தன. ஆல்ை சில கிகண்டுகள் மட்டும் சிறிதளவு சுவடுகள் விட்டுச் சென் றுள்ளதாக ஆராய்ச்சியாளர் அறிவித்துள்ளனர். சில சுவடுகள் வருமாறு:

தொல்காப்பியச் சொல்லதிகாரத்தில் உரியியலின் இறுதியிலுள்ள

அன்ன பிறவுங் கிளந்த வல்ல பன்முறை யானும் பாத்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட வியன்ற மருங்கின் இனத்தென வறியும் வரம்புதமக் கின்மையின் வழிநளிை கடைப்பிடித் தோம்படை யாணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற வுணர்தல் என்மஞர் புலவர்.'

என்னும் நூற்பாவின் உரையில் உரையாசிரியர் இளம் பூரணர், , ,

' இருமை பெருமையும் கருமையும் செய்யும்.” " தொன்று என்கிளவி தொழிற்பயில்வு ஆகும்.”

என்னும் இரண்டு நூற்பாக்களை எடுத்துக் காட்டி -யுள்ளார். இந்த இரண்டு பாக்களும் எந்த நூலிலிருந்து எடுத்தாளப்பட்டன என்று கண்டுபிடிக்க முடிய வில்லை. பாக்களைப் பார்த்தால், ஏதோ நிகண்டு நூலைச் சேர்ந்தவையாகத் தெரிகின்றன. இருமை என் லும் சொல்லுக்குப் பெருமை, கருமை என இரு பொருள் உண்டு என்பது முதற்பாவின் கருத்து. தொன்று என்னும் சொல்லுக்குத் தொழிற்பயிற்சி என்னும் பொருள் உண்டு என்பது இரண்டாவது பாவின் கருத்து. எனவே இவையிரண்டும். ஏதோ ஒரு