பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231

231

நிகண்டின்-அல்லது- எவையோ இரண்டு நிகண்டு களின் ஒரு சொல் பல் பொருள் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கவேண்டும். இவ்விரு பாக்களும் இதுவரைக்கும் கிடைத்துள்ள எந்த நிகண்டு களிலும் இல்லையாதலின், பெயர் தெரியாது அழிந்து சிதைந்து போன நிகண்டைச் சேர்ந்தனவே என்பது தெளிவு. இந்த இரு பாக்களையும் எடுத்துக் காட்டிய இளம்பூரணர் பதினேராம் நூற்ருண்டினர் எனச் சொல்லப்படுவதால் அக்காலத்துக்கு முன்பே இவை எழுதப்பட்டிருக்கவேண்டும்.

அடுத்து, யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கண நூலின் விருத்தியுரையில் ஒரு சுவடு கிடைக்கிறது. யாப்பருங்கலத்தின் செய்யுளியலில் உள்ள ',

' குறள்சிங் தின்னின்ச நேரிசை பஃருெடை

எனஐந் தாகும் வெண்பாத் த்ானே.”

என்னும் நூற்பாவின் உரையில், நேர்' என்னும் சொல்லுக்குரிய பொருள்களைப் பின்வருமாறு உரை யாசிரியர் குறிப்பிட்டுள்ளார்:

" நேர் என்பது மர்ருதற் கண்ணும், ஒத்தற் கண்ணும், தனிமைக் கண்ணும், மிகுதிக் கண்ணும், துட்பத்தின் கண் ணும், சமணுதற் கண்ணும், உடம்படுதற் கண்ணும், பாதிக் கண்ணும், தலைப்பாட்டின் கண்ணும், நிலைப்பாட்டின் கண் னும், கொடைக் கண்ணும் நிகழும்.”

அதாவ்து -கேர் என்னும் சொல்லுக்கு மாருதல், ஒத்தல், தனிமை, மிகுதி, நுட்பம், சமன், உடம்படுதல், பாதி, தலைப்பாடு, நிலைப்பாடு, கொடை எனப் பதினுெரு பொருள்க்ள் சொல்லப்படும்-என்று உரையாசிரியர் அறிவித்துள்ளார்.