பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

232

இந்தப் பதினெரு பொருளும் ஏதேனும் ஒரு நிகண்டிலிருந்து எடுத்துச் சொல்லப்பட்டிருக்க வேண் டும். அந்த நிகண்டு இன்னதென்று தெரியவில்லை. இதுவரைக்கும் கிடைத்துள்ள எந்த நிகண்டிலும் பதினெரு பொருள்கள் கூறப்படவில்லை. எடுத்துக் காட்டாக, திவாகர நிகண்டில்,

' உடன்படல், உவமை, ஒத்தல், துட்பம்,

சமன், பாதி, மிகுதி, தலைப்பாடு, தனிமைஎன திகழ்ந்த ஒன்பானும் நேர் என் கிளவி.”

என ஒன்பது பொருள்களே கூறப்பட்டுள்ளன. இந்தப் பாவில் திவாகரரே ஒன்பான்’ (ஒன்பது) என எண் ணிைக்கையிட்டுச் சொல்லிவிட்டார். சூடாமணி நிகண் டிலோ, - J

" நேர், சமம், ஈதல், பாதி, . -

நெடில், உடன்பாடு, நுட்பம்."

என ஆறு பொருள்களே அறிவிக்கப்பட்டுள்ளன. பிங்கலம் போன்ற சில நிகண்டுகளிலோ, நேர் என்னும் சொல் பேசப்படவேயில்லை. எனவே, யாப்பருங்கல விருத்தியுரையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள பதி ைெரு பொருள்களையும் கூறும் ஏதோ ஒரு நிகண்டு இருந்திருக்கவேண்டும். அது கிடைக்கவில்லை-அதன்

பெயரும் ெ தரியவில்லை.

மற்றும், திவ்யப் பிரபந்தத்தின் பெரிய விரிவுரை யில் சில விடங்களில் சில நூறபாக்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அவற்றின் அமைப்பை நோக் குங்கால் அவை நிகண்டு நூற்பாக்களாகவே தெரிகின் றன. அவையும் எந்தெந்த நிகண்டுகளைச் சேர்ந்தவை எனப் புலப்படவில்லை.