பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

234

திவாகரம் தோன்றி அழிந்துவிட்டதுபோல் சேந்தன் திவ்ாகரத்திற்கு முந்தியும் தோன்றி மறைந்திருக்க லாம். மற்றும் தொல்காப்பியச் சொல்லதிகார-இளம் பூரணர் உரையிலிருந்து எடுத்துக் காட்டப்பட்ட

' இருமை பெருமையும் கருமையும் செய்யும்.” 'தொன்று என்கிளவி தொழிற் பயில்வு ஆகும்.”

எனனும் இருநூற்பாக்களும், சிலர் கூறுவதுபோல் ஏதோ ஒரு நிகண்டைச் சேர்ந்தனவாயிராமல், தொல் காப்பியம் போன்ற ஒரு மொழியிலக்கண நூலைச் சேர்ந்தனவாயும் இருக்கலாமே ! -

ஆகக் கூடியும், பெயர் தெரியா நிகண்டுகள் சில, திவ்ர்கரத்திற்கு முந்தித் தோன்றி மற்ைந்தது போலவே, திவாக்ரத்திற்கும் சூடாமணிக்கும் உள்ள இடைக்காலத்திலும் தோன்றி மறைந்தன என்பதைத் த்ன்டயின்றி ஒத்துக்கொள்ளலாம். ஏனெனில், சூடர் மணியைத் தொடர்ந்து சிறிதும் இடைவெளியின்றிப் பல நிகண்டுகள் தோன்றி யிருக்கும்போது, சூடா ம்ணிக்கு முன்பும் திவாகரம், பிங்கலம் ஆகியவற்றைத் தொடர்ந்து சில அல்லது பல நிகண்டுகள் தோன்றி யிருக்கத்தானே வேண்டும். அந்தக் காலத்தில் ஒவ்வொரு நூற்ருண்டிலும் தமிழறிஞர் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு நிகண்டு செய்திருப்பர் போலும் ! இப்படிப் பார்த்தால், இப்போது கிடைத்திருக்கும் நிகண்டுகளைவிட, கிடைக்காமல் மறைந்து போன் நிகண்டுகளே மிகுதி என்பது தெளிவாகும். சிவசுப்ர ம்ணியக் கவிராயர் என்னும் புலவர் தாம் இயற்றிய நாமதீப நிகண்டின் தற்சிறப்புப்பாயிரப் பாடல் ஒன் றில், இதற்குமுன் தோன்றியுள்ள கிகண்டுகள்