பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237

237

ஆதரிக்கப் பெற்றவர். அவனது வேண்டுகோளின் படியே இவர் கன்னூலே எழுதினராம் ஆசிரியரது வரலாற்றை நன்னூலின் முகப்பி லுள்ள

  • மலர்தலை உலகின் மல்கிருள் அகல

இலகொளி பரப்பி யாவையும் விளக்கும் பரிதியின் ஒருதா னகி முதலீறு ஒப்பள வாசை முனிவிகந் துயர்ந்த அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின் மனவிருள் இரிய மாண்பொருள் முழுவதும் முனிவற அருளிய மூவறு மொழியுளும் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள் அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத் தொகைவகை விரியிற் றருகெனத் துன்னர் இகலற நூறி யிருநில முழுவதும் தனதெனக் கோலித் தன் மத வாரணம் திசைதொறு நிறுவிய திறலுறு தொல்சீர்க் கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோல் சீய கங்கன் அருங்கலை வினோதன் அமரா பரணன் மொழிந்தன கை முன்னேர் நூலின் வழியே நன்னூல் பெயரின் வகுத்தனன் பொன்மதில் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னு நாமத்து இருந்தவத் தோனே.”

என்னும் சிறப்புப் பாயிரச் செய்யுளால் ஓரளவு உய்த் துணரலாம்.

ஆசிரியர் காலம்

பவணந்தியாரை ஆதரித்த சீயகங்கன், மூன்ருங் குலோத்துங்கச் சோழ மன்னனின் கீழ் அடங்கியாண்ட