பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

சூடாமணி நிகண்டு

திவாகரம், பிங்கலம் என்னும் இரண்டுக்கும் அடுத்தபடியாக, கிடைத்திருக்கும் நிகண்டுகளுள் காலத்தாலும் தகுதியாலும் முதன்மை பெறுவது சூடாமணி நிகண்டு. இந் நிகண்டு எழுந்ததும் திவாகர மும் பிங்கலமுங்கூட மங்கத் தொடங்கிவிட்டன. சூடாமணிக்குப் பின்னர்ப் பற்பல நிகண்டுகள் தோன்றி யும், அவற்றுள் ஒன்ருலும் சூடாமணியின் இடத் தைப் பிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு இக் கிகண்டு பிற்காலத்தவரால் பெரிதும் பயிலப்பட்டது. நிகண்டு என்ருல் சூடாமணிதான் - நிகண்டு படித்த வர் என்ருல் சூடாமணி படித்தவர்தான் என்று பொருள் கொள்ளும் அளவுக்கு இங்கிகண்டு தமிழ் மக்களிடையே மிகவும் பரவி மிளிர்ந்தது.

பெயர்க் காரணம்

சூடாமணி என்பது, தலையில் அணியும் ஒருவகை அணியின் (நகையின்) பெயராம். மற்ற உறுப்புக் களில் அணியும் அணியினும் - மணியினும் தலைமேல் அணியும் மணியணி மிகவும் சிறப்புடைத்து. எனவே, அணிகளுக்குள் சிறந்த தலைமணியான சூடாமணியைப் போல, நிகண்டுகளுக்குள் தலைசிறந்தது இந்நூல் என் னும் கருத்தில் இஃது சூடாமணி நிகண்டு என அழைக் கப்பட்டிருக்கவேண்டும். தலைமணியாகிய சூடாமணி யைச் சூளாமணி என அழைக்கும் வழக்கம் இருப்பது போல, சூடாமணி நிகண்டைச் சூளாமணி நிகண்டு என அழைக்கும் ஒருசார் வழக்கமும் உண்டு. இங்கிகண்டு