பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249

249

அடிக்கடிச் சொல்லி யிருப்பதிலிருந்து. - பெயரோடு ஊரையும் இணைத்துச் சொல்லும் வழக்காறு அன்றும் உண்டு என்பது விளங்குவதோடு, ஆசிரியரின் ஊர்ப் பற்றும் விளங்கும். இந்த ஊர்ப் பற்று இருந்திராவிட் டால், ஆசிரியரின் ஊரை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இன்று கிடைக்காதல்லவா ? மேலும், நீர்வளம் - கில வளம்-பொழில்வளம் எல்லாம் செறிந்த வீரை என ஆசிரியர் தம் ஊரைப் புகழ்ந்திருப்பது ஈண்டு குறிப் பிடத்தக்கது.

ஆசிரியரது ஊராகிய வீரைக்குப் பெருமண்டுர் என்னும் வேறு பெயரும் உண்டு எனச்சிலர் கூறுகின்ற னர். இந்த வீரை தொண்டை மண்டலத்தில் உள்ள தென்பதில் ஐயமில்லை. ஏனெனில், ஆசிரியர் தொண்டை மண் ட ல த் தை ச் சேர்ந்தவர் எனத் * தொண்டை மண்டல சதகம் என்னும் நூல் பின்வரு மாறு கூறுகிறது :

“......... நிகண்டு சூடாமணி தானுரைத்த மண்டலவன்

குடிகொண்டது நீள்தொண்டை மண்டலமே.”

மற்றும், ஆசிரியர் தம் ஆசானைக் குன்றை வேக் தன் எனக் குறிப்பிட்டுள்ளமையும், தம்மை வீரை மன்னன் என மூன்று இடங்களில் கூறிக்கொண்டுள்ள மையும் ஈண்டு உணர்தற்பாலன. வேந்தன், மன்னன்

என்ருல் என்ன ?

குணபத்திரரும் மண்டல புருடரும் குன்றை, வீரை ஆகிய ஊர்களை ஆண்ட குறுகில மன்னர்களாய் இல்லாவிடினும், அக்காலத்தில் இருந்த கிராம ஆட்சி முறையில், அவ்வவ்வூர்களின் ஆட்சித் தலைமைப் பொறுப்பாயினும் இவர்களிடம் இருந்திருக்கவேண் டும். அல்லது, சமயத்துறையில் - கல்வி கலைத்துறை யில் அவ்வவ்வூர்களில் இவர்கள் முதன்மையும்