பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255

255

தொகுதியிலோ 1575 சொற்களுக்கு உரிய பொருள்கள் விளக்கப்பட்டுள்ளன. திவாகரத்தை நோக்க இது எவ்வளவோ மிகுதியல்லவா ?

நூலின் போக்கு

நூலின் தொடக்கத்தில், ஆசிரியரின் முன்னுரை யாகிய தற்சிறப்புப் பாயிரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு தொகுதியின் தொடக்கத்திலும் அருகக் கடவுள்மேல் காப்புப் பாடல் உள்ளது. இதனுல், ஆசிரியர் சைனர் என்பது கன்கு புலகுைம். மற்றும், தெய்வங்களின் பெயர்களைக் கூறவந்த இடத்தில் திவாகரரும் பிங்கலரும் சைவக் கடவுளரை முதலிற் கூறியிருக்க, மண்டல புரு.ரோ அருகக் கடவுளுக்கே முதன்மை கொடுத்துள்ளார். நூலின் தொடக்கமேஅதாவது, முதல் தொகுதியின் முதல் பாடலே அரு கனைப் பற்றியதுதான். இதோ அப்பாடல் :

' அநகன் எண்குணன் நிச்சிந்தன்

அறவாழி வேந்தன் வாமன் சினன் வரன் உறுவன் சாந்தன்

சினேந்திரன் நீதி நூலின் முனைவன் மாசேனன் தேவன் மூவுல குணர்ந்த மூர்த்தி புனிதன் வென்ருேன் விராகன்

பூமிசை நடந்தோன் போதன்."

இப்படியாகத் தொடங்கி முதல் ஐந்து பாடல்களில் அருகக் கடவுளின் பெயர்களை அடுக்கிக்கொண்டு போகிருர். இதன் பின்னரே சிவன், திருமால் முதலான தெய்வங்களைப் பற்றிப் பேசியுள்ளார்.