பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

256

மற்றும், மண்டல புருடர் ஒவ்வொரு தொகுதி யின், இறுதியிலும், இத்தொகுதியில் மொத்தம் இத் தனை பாடல்கள் பாடியுள்ளேன் என்று குறிப்பிட் டிருப்பது குறிப்பிடத் தக்கது.

ஒவ்வொரு தொகுதியிலும் தொடக்கத்தில் காப்புப் பாடலும் இறுதியில் பாடல்களின் எண்ணிக்கையும் ஆசிரியர் பெயரும் அமைக்கப்பட்டுள்ளமைக்கு எடுத் துக் காட்டாக, ஐந்தாம் தொகுதியாகிய இடப்பெயர்த் தொகுதியின் முதல் பாடலும் இறுதிப் பாடலும் வருமாறு :

(முதல் பாடல் - காப்பு] ' கடலெழும் இரவி கோடி கால்சீத்துப் பொடித்த தென்ன

மடலவிழ் கமல ஆர்தி வந்த வாமனேயே போற்றி அடைவுள திணை தேம் ஊர்வான் அகம்புறம் ஆதி யாய இடனுடைத் தாக வைத்த இடப்பெயர்த் தொகுதி

சொல்வாம்.” (இறுதிப் பாடல்)

  • முன்னெடு மேலும் மற்று மொழியுமஞ் ஞாங்கர் தானே முன்னரே தலைத்தா ளாகும் முதலொடு புரமும் அப்பேர் அன்னதிவ் விடப்பேர்க்கு எட்டோடு அறுபது விருத்தம்

செய்தான் மன்னுசீர்க் குணபத்திரன் தாள் வணங்கு மண்டலவன்

தானே.” (எட்டோடு அறுபது விருத்தம் - அறுபத்தெட்டு விருத்தப் பாடல்கள்.)

அச்சுப் பதிப்புகள்

மற்ற நிகண்டுகளினும் சூடாமணியே மக்களால் மிகவும் பயிலப்பட்டதால், அச்சு வசதி ஏற்பட்ட