பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259

259

பெயராகவும் குறிப்பிடப்பட்டிருப்பது ஈண்டு கோக்கத் தக்கது.

பதினேராம் தொகுதியின் இன்றியமையாமையைச் துடாமணி ஆசிரியர் மண்டல புருடரே உணர்ந்திருந் தார். அதனல், எளிதில் மனப்பாடம் செய்வதற்குரிய முறையில் இத்தொகுதியை அமைப்பதற்கு வழி கண் டார். இத்தொகுதியில் தாம் சொல்ல எடுத்துக் கொண்ட 1575 சொற்களையும், பதினெட்டு மெய்யெழுத் துக்களின் அடிப்படையில் பதினெட்டு வகை எதுகைச் சொற்களாகப் பிரித்துக் கொண்டார்.எதுகை என்பது, ஒவ்வொரு சொல்லிலும் இரண்டாவது எழுத்து ஒத் 'திருப்பதாகும். அகம், நகை, முகில் என்னும் சொற் களில் இரண்டாவது எழுத்தாக - க - கை - கி - எனக் ககர இனம் ஒத்திருக்கிறதல்லவா ? இதற்குக் ககர எதுகை என்று பெயராம். வனம், கனிவு, பனுவல் என்னும் சொற்களில் இரண்டாவது எழுத்தாக - ன - ணி - னு - என னகர இனம் ஒத்திருக்கிறதல்லவா? இதற்கு னகர எதுகை' என்று பெயராம்.

இப்படிப் போல 1575 சொற்களையும், ககர எதுகை முதலாக னகர எதுகை ஈருகப் பதினெட்டு வகைக்குள் அடக்கினர் ஆசிரியர். அவையாவன :

1. க கர எதுகை 7. த கர எதுகை 2. க. கர எதுகை 8. ந. கர எதுகை. 3. ச கர எதுகை 9. பகர எதுகை 4. ஞ கர எதுகை 10. ம. கர எதுகை 5. ட கர எதுகை 11. ய கர எதுகை 6. ண கர எதுகை 12. கர எதுகை