பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261

261

ஆசிரியர் ஒரு சொல்லுக்கும் அடுத்த சொல்லுக் கும் தொடர்பு கண்டார் இல்லை - ஒரு செய்யுளுக்கும் அடுத்த செய்யுளுக்கும் தொடர்பு கண்டாரில்லை. எப்படியோ முடிந்த வரைக்கும் ஒவ்வொரு செய்யுளி லும் எதுகைச் சொற்களை அமைத்தால், செய்யுளை நினைவில் நிறுத்துவதற்கும், வேண்டிய சொல்லை. வேண்டியபோது நினைவிலிருந்து வருவிப்பதற்கும். உதவும் என்று எண்ணினர்-அப்படியே செய்தார். பொதுவாக எவர் பாடிய எந்த நூலிலுள்ள எந்த விருத்தப் பாடலும் நான்கு அடிகளிலும் எதுகை உடையதா யிருப்பதால், நினைவில் இருத்துவதற்கும் மீண்டும் வருவிப்பதற்கும் பெரிதும் உதவும் இயல்பின தாம்.அதேைலயே மண்டல புருடர் விருத்தப் பாடலைத் தேர்ந்தெடுத்தார். ஒவ்வொரு பாடலின் கான்கு அடி களுக்கும் எதுகை வேண்டுமாதலால், 1575 சொற்களை யும் எதுகை வாரியாகப் பிரித்துப் பயன்படுத்திக் கொண்டார்.

ஆசிரியர் முதலில் ககர எதுகைச் சொற்கள் - அடுத்து ங்கர எதுகை - அடுத்து சகர எதுகை - என்று இந்த வரிசையில் அமைத்திருப்பதிலும் இக்கால அகராதி முறையின் வாடை வீசுகிறது. இக்கால அக ராதிகளில், முதலில் முதல் எழுத்தின்படி சொற்களை வரிசைப் படுத்திப் பின்னர் அவற்றையே இரண்டாம் எழுத்தின்படியும் வரிசைப்படுத்துவர். அகம், அணில், ஆடல், ஆவல்-இது இக்காலத்து அகராதி முறை. அதாவது, - முதலில் அகம், அணில் என ‘அ’வில் தொடங்கும் சொற்கள்; பின்னர் ஆடல், ஆவல் என 'ஆ'வில் தொடங்கும் சொற்கள். 'அ'வில் தொடங்கும் சொற்களுக்குள்ளும் க என்பதை இரண்டாவது,