பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

264

மயக்கம் போதிய இலக்கியப் பயிற்சி யில்லாதோர்க்கே ஏற்படும். இந்த மயக்கம் ஏற்படாதிருக்க ஆசிரியர் சில விடங்களில் இந்தச் சொல்லுக்கு இத்தனை பொருள் உண்டு என்று இறுதியில் எண்ணிக்கை யிட்டும் கூறியுள்ளார். எடுத்துக் காட்டாக குழல் என்னும் சொல்லுக்குத் துளையுடைப் பொருள், மயிர் இசைக்குழல் என்னும் மூன்று பொருள் உண்டு என்பதை,

' குழல்துளையுடைப் பொருட்பேர் மயிர் இசைக்குழல்

முப்பேரே.”

என்னும் அடியால் அறிவித்துள்ளார். இறுதியில் முப்பேர் (மூன்று பொருள்களின் பேர்) என்று எண் .ணிக்கையிட்டு விட்டதால் பொருள் மயக்கத்திற்கு இடமில்லை யன்ருே ?

எனவே, இதுபோல்வனவற்றைப் பெருங் குறை யாக எடுத்துக்கொள்ளக் கூடாது. செய்யுளில் இடம் அடைப்பதற்காகவும் எதுகை மோனை அமைப்பதற் காகவும் - அதே நேரத்தில் அழகுக்காகவும் சுவைக் காகவும் சில அடைமொழிச் சொற்களைச் சேர்க்கத் தான் வேண்டியிருக்கும். இந்நுட்பங்களையெல்லாம் செய்யுள் இயற்றும் பயிற்சி யுடையோரே நன்கறிவர்.'

ஆசிரியர் மண்டல புருடரே பதினேராம் தொகு தியை எதுகை முறையில் வரிசைப்படுத்திப் படிப் போர்க்கு வசதி செய்திருந்தும், மேலும் சில வசதி க9ளப் பிற்காலத்தார் செய்துகொண்டுள்ளனர். ஒரே எதுகைச்சொற்கள் அமைந்த பாடல்களைத் தனியாக வும், கலப்பு எதுகைச் சொற்கள் அமைந்த பாடல் களைத் தனியாகவும் பிரித்தனர். ஒரே எதுகைச்