பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269

269

களுங்கூடப் பழையனவே. ஆணுல், இனிமை என் னும் பொருள்தான் இனிமையாகவும் புதுமையாகவும் உணரப்பட்டுச் சுவை பயக்கிறது.

ஆம், உண்மைதான் ! உப்பு என்னும் சொல்லுக்கு 'இனிமை என்னும் பொருள் முற்றிலும் பொருந்தும்முக்காலும் பொருந்தும்.

தனியே வாயில் போட்டால் கரித்துத் து - து’ என்று துப்பக்கூடிய பொருள் உப்பு என்பது உண்மைதான் என்ருலும், தனித் தனியே கச்சுத் தன் மையுடைய சோடியம், குளோரைன் என்னும் இரண்டு பொருள்களின் சேர்க்கைப் பொருள்தான் உப்பு என் பது உண்மைதான் என்ருலும், உப்பு என்னவோ இனிமை தரும் பொருள்தான் ! நூறு ரூபாய் செல விட்டு ஆக்கும் ஒர் உணவுப் பொருளில் ஒரு சிறி தளவு உப்பு போடாவிட்டால் அதை வாயில் வைக்க முடியுமா ? சிறிது உப்பு சேர்த்துவிட்டாலோ அமிழ் தம் -அமிழ்தம் அல்லவா? புளி, மிளகாய், எண்ணெய், கடுகு, சீரகம், வெங்காயம், காய், பயறு முதலியவற் றுள் எதையும் சேர்க்காமலேயேகூட 92–GöðTGö)6). உண்டுவிட முடியும். ஆனல் உப்பு போடா மல் உண்ண முடியாதே ! உப்பு ஒன்றுமட்டுமே சேர்த்துக் கூழாகவும் கஞ்சியாகவும் உட்கொண்டுவிட முடியுமே ! இதல்ைதான், உப்பில்லாப் பண்டம் குப் பையிலே' என்னும் பழமொழி எழுந்தது. தெலுங்குப் பெரியாராகிய வேமன்னர் என்பவரும் வேமன்ன பத் தியம் என்னும் தமது நூலின் ஒரு பாடலில் இந்த உப்புச் செய்தியை ஒரு பெரிதாக மதித்து, உப் பில்லாத கறி (பதார்த்தம்) உதவியற்றது. (உப்பு லேனு கூர ஆனம்புருச்சலகு') என்று கூறியுள்ளார்.