பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271

271

சென்று கேட்டுப் பார்ப்போமே ! ஆம், உண்டு என்று அவர் திருவாய் மலர்கிருர் :

ஒரு தலைவனும் தலைவியும் ஊடல்கொள்கின்றனர்; பின்னர் ஊடல் நீங்கிக் கூடுகின்றனர். ஊடலைத் தொடர்ந்து நிகழ்ந்த அக் கூடலில் மிக்க இனிமை கண்டனர். "ஆகா! ஊடிக் கூடும் இந்த இனிய இன்பம் இன்னும் கிடைக்காதா” என்று ஏங்குகிருன் தலைவன். சுவை கண்ட பூனையல்லவா ? இந்தக் கருத்து, திருக் குறள் காமத்துப் பாலில் ஊடல் உவகை என்னும் பகுதியில் கூறப்பட்டுள்ளது.

இதோ குறள் : -

'ஊடிப் பெறுகுவம் கொல்லோ துதல்வெயர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு.”

இந்தக் குறட் பாவில் இனிமை என்னும் பொருளில் உப்பு என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார் பெரு மான் வள்ளுவனர். இலக்கியம் கண்டதற்கு இலக் கணம் என்றபடி, இது போன்ற இலக்கிய ஆட்சிகளைக் கண்டே நிகண்டு நூலார் சொற்பொருள் தொகுத்துள்

,5ҮТ657 ҒТ ,

மற்றும் உலகியலில்கூட, ஒரு காட்சியோ - ஒரு சொற்பொழிவோ - ஓர் எழுத்துப் படைப்போ - அல்லது இன்னும் வேறு ஏதேனும் ஒன்ருே சுவை பயக்கவில்லையாயின், அதில் உப்பு சப்பு ஒன்றும் இல்லை என்று கூறி மக்கள் உதட்டைப் பிதுக்குவது கண் கூடு. இவ்வாறெல்லாம் நின்று உப்பு என்னும் சொல்லின் இனிமைப் பொருள் நமக்கு இனிமை தருகிறது.