பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

272

அடுத்து, சமன்' என்னும் சொல்லின் பொருள் உணரத்தக்கது. சமன் என்பதற்கு யமன், கடு என்னும் இரு பொருள்கள் உண்டாம்.

“ சமன் யமன் நடுவும் ஆகும்.”

என்பது சூடாமணிப் பாடல் பகுதி. சமன் என்னும் சொல்லுக்குரிய நடு (சமம்) என்னும் பொருள், அனைவரும் அறிந்த அன்ருட வழக்கில் உள்ள பொருளேயாகும் ; ஆனல் யமன் (எமன்) என் னும் பொருளோ புதுமையானது- நினைக்கத் தக்கது.

எமன் என ஒருவன் இருக்கிரு-ைஇல்லையா என்ற ஆராய்ச்சி ஈண்டு வேண்டுவ தின்று. ஆனல் அப்படி: யொருவன் இருப்பதாக ஒரு சிலராயினும் நம்புகின் றனர். அவன் எல்லோரையும் சமமாகக் கருதுபவனும். அரசர்-ஆண்டி, இல்லறத்தார்-துறவறத்தார், ஏழை செல்வர், இளையவர்-முதியவர், ஆண்கள்-பெண்கள், பிறந்த குழந்தை - குழந்தை பெற்ற தாய் என்ற வேற்றுமை அவனுக்குக் கிடையாதாம். அவரவர்க் குள்ள காலக்கெடுவின்படி ஒரு நொடி நேரமும் தாழ்க்காது சென்று உயிரைப் பிடிப்பானும். அவனது இந்த நேர்மைப் பண்பை - நடுவுநிலைமையை, சாத்தனர் இயற்றிய மணிமேகலை என்னும் காப்பியத் தில் உள்ள

' தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்

ஈற்றிளம் பெண்டிர் ஆற்ருப் பாலகர் முதியோர் என்னுன் இளையோர் என்னுன் ”

என்னும் பாடற் பகுதியாலும் உணரலாம். எனவே, எவரும் எமனுக்குக் கையூட்டு (இலஞ்சம்) கொடுத்து உயிரைக் காத்துக்கொள்ள முடியாதுபோலும் ஆனல்,