பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275

. o 尊 அகராதி நிகண்டு

பெயர்க் காரணம்

இந்தக்காலத்தில் சொற்பொருள் கூறும்(டிக்ஷனரி) நூலை அகராதி என வழங்குகிருேம் நாம். அகராதி என்னும் இந்தச் சொல்லை முதல்முதல் அறிமுகப் படுத்தியது இந்த அகராதி நிகண்டுதான். சொற் பொருள் கூறும் நூலை மக்கள் பண்டைக் காலத்தில் 'உரிச்சொல் என்னும் பெயரால் அழைத்தார்கள் : இடைக்காலத்தில் நிகண்டு’ என்னும் பெயரால் அழைத்தார்கள் ; இக்காலத்தில் அகராதி என்னும் பெயரால் அழைக்கின்ருர்கள். அகராதி, நிகண்டு என்னும் இரண்டு பெயர்களையும் இணைத்துக்கொண்டு இந்த அகராதி நிகணடு காட்சியளிப்பது ஒரு புதுமையே..! அதாவது, தமிழ் அகராதிக் கலை (Tamil Lexicography) வளர்ச்சியில் இது ஒரு புதுத் திருப்பமே யாகும். திருப்பம் எப்படி என்று பார்ப்போம் :

இதுவரையும் சொற்பொருள் விளக்க எழுந்த நூல்கள் யாவும் அ, ஆ என்ற அகர வரிசையில் ஆசிரியர்களால் அமைக்கப்படவில்லை. உலகிலேயே முதன் முதலாக இந்த அகராதி நிகண்டே அ, ஆ என்ற வரிசையில் ஆசிரியரால் சொற்கள் நிரல் செய்யப்பட்டு இயற்றப்பட்டது. அதல்ை அகராதி நிகண்டு என்னும் சிறப்புப்பெயரும் பெற்றது. இக்காலத்தில் டிக்ஷனரியை (Dictionary) அகராதி என்று அழைக்கக் கற்றுக் கொடுத்ததே இந் நிகண்டுதான். எனவே, இது ஒரு