பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283

283

எடுத்துக் காட்டாக அகராதி நிகண்டிலிருந்து இரண்டு நூற்பாக்கள் வருமாறு :

(அம் முதல் ஒரு பெயர்) (1) அசன் என்பதுவே சங்கான் ஆகும்.”

(2) “ அம்பிகை என்பது உமையவள் பெயரே.”

அரன் என்னும் சொல்லுக்குச் சங்கரன் என்னும் ஒரு பொருள் உரியது. அம்பிகை என்னும் சொல்லுக்கு உமையவள் என்னும் ஒரு பொருள் உரியது. இப் படியாக ஒரு பொருள் உடைய எழுபத்திரண்டு சொற்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றையடுத்து. இரண்டு பொருள்கள் மட்டும் உடைய சொற்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிக்கு அம்முதல் இருபெயர்’ என்னும் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது இதற்கு எடுத்துக்காட்டாக இரண்டு நூற்பாக்கள் வருமாறு :

(அம் முதல் இரு பெயர்)

(73) “ அந்தரியே உமை துர்க்கை என்றிருபேர்.”

(74) ' அனந்தை தானேர் சத்தியும் பூமியும்.”

அந்தரி என்னும் சொல்லுக்கு உமை, துர்க்கை என்று இரு பொருளாம். அனந்தை என்னும் சொற்குச் சத்தி, பூமி என்று இரு பொருளாம். இப்படியாக இரு பொருள் உடைய அறுபத்து மூன்று சொற்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றைத் தொடர்ந்து மூன்று பொருள்கள் மட்டும் உடைய சொற்கள் அமைக்கப் பட்டுள்ளன. இப்பகுதிக்கு அம்முதல் முப்பேர்’ எனத் தலைப்பு தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு நூற்பா வருமாறு :

18