பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285

உரிச்சொல் நிகண்டு

சூடாமணிக்கு அடுத்ததாக உரிச்சொல்ங்கண்டைச் சொல்லலாம். நிகண்டு என்பதைக் குறிக்கப் பண்டைக் காலத்தில் உரிச்சொல் என்ற பெயரே பயன்படுத்தப் பட்டது என முன்னரே கூறப்பட்டுள்ளது. எளிதில் விளங்காமல் அரிதிற் பொருள் விளங்கக்கூடியதும் செய்யுளுக்கு உரியதுமாகிய சொல்லுக்கு உரிச்சொல் என்று பெயராம். இத்தகு உரிச் சொற்களைப் பற்றிய நூலுக்கு உரிச்சொல் நிகண்டு என்னும் பெயர் கொடுக்கப்பட்டது.

ஆசிரியர் வரலாறு

உரிச்சொல் நிகண்டின் ஆசிரியர் காங்கேயன் என்னும் புலவர். இவர் தொண்டை காட்டிலுள்ள செங்கற்பட்டு என்னும் ஊரினர் என்று ஒரு சாராரும், கொங்கு நாட்டினர் என்று கொங்கு மண்டல சதக ஆசிரியரும் கூறுகின்றனர். இதுபோலவே, இவர் செங்குந்த மரபினர் என்று ஒரு சார் கருத்தும், வேளாள மரபினர் என்று ஒரு சார் கருத்தும் உள்ளன. மேலும் இவர் சைவ சமயத்தினர் என்றும் துறவி என்றும் சொல்லப்படுகின்ருர்,

இவர் சைவ சமயத்தினர் என்ற கருத்துமட்டும் உறுதியானது. காங்கேயன் என்பது முருகக் கடவு ளுடைய பெயர்களுள் ஒன்று. எனவே, அப்பெயரை -யுடைய இவர் சைவர் என்பது தெளிவு. மேலும், தெய்வப் பெயர்த் தொகுதியில் சிவன், பார்வதி,