பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

286

விநாயகர், முருகன் ஆகிய சைவ சமயக் கடவுளரையே இவர் முதலில் கூறியிருப்பதாலும் இவர் சைவர் என்பது புலகுைம். மற்றும் இவர், முதல் செய்யுளில், திருமாலாலும் கான்முக லுைம் காண முடியாத சிவபெருமான் எனச் சிவனைப் புகழ்ந்துள்ளார் :

" திருமாலுஞ் செங்கமல மேயானுங் காணுப்

பெருமான் பிறைகுடும் பெம்மான்-அருள் மூர்த்தி நன்னெஞ்சி ன்ைமறையோன் தில்லை நடம்புரிவோன் என்னெஞ்சின் மேய இறை.”

என்பது செய்யுள். இதலுைம் ஆசிரியர் சைவரே என்பது உறுதி.

காலம்

காங்கேயன் பதின்ைகாம் நூற்ருண்டினர் எனச் சிலர் கூறுகின்றனர்; இது பொருத்தமாகப் புலப்பட வில்லை. பதினரும் நூற்ருண்டின் பிற்பகுதியிலும் பதினேழாம் நூற்ருண்டின் முற்பகுதியிலும் இவர் வாழ்ந்தார் எனவும், கி.பி. 1600-ஆம் ஆண்டு வாக்கில் உரிச்சொல் நிகண்டு இயற்றப்பட்டது எனவும் ஒரு சாரார் கூறுகின்றனர். ஏறக்குறைய இக்கருத்து. பொருத்தமானதாகத் தோன்றுகிறது. பதினெட்டாம் நூற்ருண்டில் அரும்பொருள் விளக்க நிகண்டு. இயற்றிய அரு மருந்தைய தேசிகர், தமது நூலின் பாயிரப் பகுதியில், பதினரும் நூற்ருண்டில் சூடாமணி நிகண்டு இயற்றியவராகக் கருதப்படும் வீரை(மண்டல. புருடர்) மண்டலவருக்கு அடுத்த இடம் காங்கேய னுக்கு அளித்துள்ளார்: