பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

292

இரகூடிணிய ஆண்டு 1840-க்குச் சரியான விகாரி ஆண்டு

(மேல் உள்ளது பதிப்பின் முதல் பக்கத்தில் உள்ள செய்தி யாகும். இனி பதிப்பின் இறுதியில் உள்ள செய்தி வருமாறு :-) -

பத்தாவது ஒரு சொற் பல்பொருட் பெயர்த் தொகுதி முற்றும்

o

ஆகத் தொகுதி பத்திற்கு வெண்பா - உளஉய (220):

முற்றிற்று

இஃது, புதுவை மாநகரம் - குவெற்னமா அச்சுக் கூடத்தில் அ.துத்தென் துரையவர்களால் 1840ஆம் ஆண்டில், பதிப்பிக்கப்பட்டது.

இதன் விலை - ரூபாய், தெ (3/4)

மேலுள்ளபடி கோக்கின், புதுவைப் பதிப்பில் பத்துத் தொகுதிகளே உள்ளன என்பது தெளிவு. மற்றும், தமிழர்கள் பலர் நிகண்டுகளைப் பற்றி அறியா திருக்கும்போது, பிரஞ்சுக்கார வெள்ளையர்கள் உரிச் சொல் நிகண்டுப் பதிப்பில் புகுந்து விளையாடியிருப்பது இங்கே குறிப்பிடத் தக்க செய்தியன் ருே ?

புதுவைப் பதிப்பின் முதல் பக்கத்துச் செய்தியாக மேலே கொடுக்கப்பட்டிருக்கும் கருத்தை யமைத்து மழவை மகாலிங்கக் கவிராசர் என்பவர் ஒரு சிறப்புப் பாயிரம் பாடியுள்ளார். அது புதுவைப் பதிப்பில் நூலுக்கு முன்னல் அமைக்கப்பட்டுள்ளது. அப்பாடல் வருமாறு :