பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

298

தேய்ந்தோ போனதால் 'க' என்னும் எழுத்துப்போல் படிப்பவர் கண்கட்குத் தெரிந்திருக்கலாம்; எனவே அவர்கள் கயாகரம் எனப் படித்ததோடன்றி, ஏடு பெயர்த்து எழுதியபோதும் கயாகரம் என்றே எழுதி விட்டிருக்கவேண்டும். இந்தக் கருத்தே பொருத்த மானதாகப் புலப்படுகிறது. இதற்கு மாருக, கயாகரம் என்னும் பெயரே கயாதரம் என மாறிற்று என்று சொல்ல முடியாது. க என்னும் எழுத்து 'த' என்னும் எழுத்தாக ஒலைச்சுவடியில் கோடு நீண்டு மாறுவது இயற்கைக்கு முரணுனது.

மற்றும், கயாதரம் என்னும் பெயரை மக்கள் சிலர் பேச்சு வழக்கில் கெயாதரம் என நீட்டி நெளித்துப் பேசியிருக்கவேண்டும். கந்தகம் கெந்தகம் எனவும், கஜமுகன் கெஜமுகன் எனவும், கங்காதரன் கெங்கா தரன் எனவும் சொல்லப்படுவதைப் போல, கயாதரமும் கெயாதரம் எனச் சிலரால் சொல்லப்பட்டு, பின்னர் அவ்வாறே எழுதப்பட்டும் இருக்கவேண்டும். பேச்சு நடைக்கு ஏற்பவே எழுத்து நடையும் அமையும் என்பது இக்கால மொழியியலாரின் (கிரீனிங் (Greening என் னும் ஆசிரியரது) கொள்கையன்ருே? இக்காலக் கொள்கை என்றென்ன..! செந்தமிழும் காப் பழக்கம் என அன்றே ஒளவையார் அறிவித்துள்ளார் அல்லவா? எனவே, கயாதரம் என்பதையே நூலின் பெயராகக் கொள்ளலாம்.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் கயாதரர், தேவை எனப்படும் இராமே சுரம் என்னும் ஊரினர்; சோமேசர் என்பவரின் மகன்; சைவர்; அந்தணர்; தமிழ், வடமொழி இரண்டிலும்