பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

300

' தீட்டு மறைபயில் நாவினன் என்றுஞ் செழுந்தமிழ் நூல்

கேட்ட செவியினன் கேளா வறிவன் கெயாதரத்துள் ஈட்டிய சொற்பொருள் எல்லாந் தொகுத்தி ரிரண்டாவது காட்டிய தொல்லை விலங்கின் பெயரியல் கண்டு கொள் ளே

என்னும் பாடலானும், மரப்பெயரியலிலுள்ள,

' காசிய கோத்திரம் வாழவந்தோன் தென் கலைத்தமிழ்தேர்

மாசில் பெருந்தகை மாரு வறிவன் மலாயனுங் கேசவனும் புகழ் தேவைநன் னுடன் கெயாதரத்துப் பேசி யமைத்தனன் ஐந்தாவது மரப் பேரியலே.”

என்னும் பாடலானும், பல்பொருட் பெயரியலிலுள்ள,

" நீடும் பதமும் பொருளும் தெரிந்து நிலைபெறவே

நாடு மவர்க்கு நலந்தரு மாறு நயத்தொ டென்றுங் கேடும் பெருக்கமும் இல்லாத தேவைக் கெயாதரன் சீர் பாடுந் தமிழில் ஆருவது பல்பொருட் பேரியலே.”

என்னும் பாடலானும், ஒலி பற்றிய பெயரியலிலுள்ள,

" மேவும் அரும்பொருள் அந்தாதி கேட்டிந்த மேதினியோர் தாவும் வினைகெடச் சாற்றிய கோன்தமிழ்த் தேவை மன்னும் கோவை யிராமீ சுரக்கோவை சொன்ன குருபரன் மற் ருேவுத லின்றி யமைத்தான் பத்தாவது ஒலியியலே.”

என்னும் பாடலானும், பிறவற்ருனும் அறியப்படும்.

காலம்

ஆசிரியரின் காலம் பற்றி அறிஞர்களிடையே குழப்பமே காணப்படுகிறது. பதின்ைகாம் நூற்ருண் டிலிருந்து பதினேழாம் நூற்ருண்டுவரை அங்கும் இங்குமாகக் கயாதரரின் காலம் பந்தாடப்படுகிறது. எது எப்படி யிருந்தபோதிலும், பதினெட்டாம் நூற்