பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303

303

பாவியல் நூற்கூறு ஓர் சொல்

பல்பொருள் தொகையெலாம் சேர்த்து

ஒவிலா வனஞ் சிறப்ப

ஒரு பெரு நூல தாக”

என்பது அப்பாடல். இதிலிருந்து, ஒரு சொல் பல்

பொருள் கூறும் பதினேராவது இயலும் கயாதரத்தில் உண்டு என்பது தெளிவு.

கயாதரத்தில் மொத்தம் 566 பாடல்கள் உள்ளன. முதல் பத்து இயல்களிலும் 10,500 சொற்களும் பதினேராவது இயலில் 850 சொற்களும் பேசப்பட் டுள்ளன.

கயாதரப் பாடல்கள் கட்டளைக் கலித்துறை என் லும் பாவினத்தைச் சேர்ந்தவையாகும். இது, கெட்டுரு செய்து நினைவில் இருத்துதற்கு மிகவும் ஏற்றதாகும். மேலும், இந்நூல் அந்தாதித் தொடையில் அமைக் திருப்பது, பாடல்களை மீண்டும் நினைவிலிருந்து வருவித்தலுக்கு மிகவும் உதவி செய்யும். அந்தாதித் தொடையாவது, ஒரு பாட்டின் அந்தத்தில் (இறுதி யில்) உள்ள ஒர் எழுத்தோ அல்லது ஓர் அசையோ அல்லது ஒரு சொல்லோ அடுத்த பாட்டின் ஆதியில் (முதலில்) அமையும்படித் தொடுத்துப் பாடுவதாகும். ஒரு பாட்டை ஒப்பித்ததும் அதன் இறுதிப் பகுதியின் துணைகொண்டு அடுத்த பாட்டைத் தொடங்கி ஒப்பிப் பதற்கு அந்தாதி முறை மிகவும் உதவுமன்ருே ? இம் முறையில் நோக்குங்கால், சூடாமணி நிகண்டைவிடக் கயாதர நிகண்டு நினைவில் இருத்துதற்கும் (Retention) மீண்டும் வருவித்தலுக்கும் (Recal) மிகவும் ஏற்ற தென்பது புலனுகும்.