பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313

பாரதி தீபம்

பெயர்க் காரணம்

இந்த நிகண்டும் ஆசிரியர் பெயரைத் தொட்டுக் கொண்டே யுள்ளது. திருவேங்கட பாரதி என்பவரால் இயற்றப்பட்டதாதலின் பாரதி தீபம் என்னும் பெயர் பெற்றது. தீபம் என்ருல் விளக்கு. விளக்குபோல் இருந்து சொற்பெயர்ப் பொருள் விளக்கம் செய்தலின் நிகண்டுகளைத் தீபம் என அழைத்தல் மரபு.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் திருவேங்கட பாரதி என்பவர். இவருக்

குப் பரமானந்த பாரதி என்னும் வேறு பெயரும் உண் டாம். இவர் தென் கடம்பை என்னும் ஊரினர்; அந்த னர்; துறவி, கவி வல்லவர். பாரதி தீப நிகண்டின் ஒவ்வொரு தொகுதியின் இறுதியிலும் இத்தனையாவது தொகுதியாகிய இந்தத் தொகுதியை இன்னர் செய்தார் என்ற குறிப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, மூன்ரும் தொகுதியாகிய விலங்கின் பேர்த் தொகுதி யின் இறுதிப் பாடல் வருமாறு :

  • மீன்ருவு வாவிக் கடம்பையில் வாழ்திரு வேங்கடவன்

ஏன்ருதல் கூறுங் கவிவேந்தன் பாரதி யேற்றமலர்த்

தேன் ருழ் தொடைப்புயன் செப்பிய பாரதி தீபந்தன்னில்

மூன்ருவது விலங்கின் பேர்த் தொகுதி முடிந்ததுவே.”

இன்ன பிற பாடல்கள் ஆசிரியரைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை அளிக்கின்றன.