பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317

317

நூற்ருண்டின் பிற்பகுதியினர் அல்லது பதினெட்டாம் நூற்ருண்டினராக ஆண்டிப்புலவரைக் கொள்ளலாம்.

நூல் அமைப்பு

ஆசிரிய நிகண்டு மிக நீளமான அடி கொண்ட ஆசிரிய விருத்தத்தால் ஆனது. பதினெரு தொகுதிகள் உள்ளன. மொத்தம் 263 பாடல்கள் உள்ளன. முதல் பத்துத் தொகுதிகளில் மட்டும் 12,000 சொற்கள் எடுத் துப் பேசப்பட்டுள்ளனவாம். நூலின் மாதிரிக்காகப் பதினேராம் தொகுதியாகிய ஒரு சொல் பல் பொருட் பெயர்த் தொகுதியிலிருந்து ஒரு பாடல் காண்பாம் :

' கஞ்சமிகு தீபமோர் தகழிவட் டம்படைக்

கலமேறு தாளமுடனே கட்டில்எட் டும்பாண்டில் என்பர்செல் வம்பெருமை

கருமைமண் டிலம்விலங்கு சஞ்சரிக மிகவெறுப் பொடுகமலை வரவழைத்

தல்பிண்டி பத்துமாவென் ருகும்வெறி யாட்டுநாற் றங்கலக் கத்துடன்

சாறுவெம் பேய்வெருவுதல் எஞ்சல்பெறு வட்டமொடு துருவையிரு நாலும்வெறி

யெழுமோசை பற்றுநாடுர் ஏற்றகர தலநெடும் போதுபுனல் சோலைபல்

லியம்பண்ட மிவைபாணியாம் செஞ்சொலா வணங்கோட சம்புனற் கரைபாகல்

திகழ்விலங் கின்வால் பசுச் செய்வரம் பிவைகூல மென்றுமுத் தமிழ்முனி

செப்புமிப் பொருளாகுமே.”

இப்பாடல் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகும். பார்வைக்குப் பதினறு அடிகள்