பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

பெயராலேயே அழைக்கப்பட்டன. சொல்லுக்குப் பொருள் கூறும் தனி நூலை இப்போது நாம் அகராதியென அழைத்தல் போல அந்தக் காலத்தில் உரிச்சொல் அல்லது உரிச்சொல் பனுவல் என அழைத்தார்கள். உரிச் சொல் என்னும் பெயர் நாளடைவில் மறைந்து போக, நிகண்டு என்னும் பெயர் நிலைத்துவிட்டது.

சொல்லுக்குப் பொருள் கூறும் துறை நூலுக்கு முதலில் உரிச்சொல் என்னும் பெயர் கொடுக்கப் பட்டதன் காரணமாவது:—

சொல்லுக்குப் பொருள் கூறும் துறை, முதன் முதல் தொல்காப்பிய உரியியலில் காணப்பட்டது. அதில் உரிச் சொற்கள் பொருள் விளக்கஞ் செய்யப் பெற்றிருத்தலைக் கண்ட பிற்கால அறிஞர்கள், தாமும் சொற்பொருள் விளக்கம் தரும் தனி நூற்கள் இயற்றத் தொடங்கி அவற்றை உரிச்சொல் என்னும் பெயரால் அழைத்தார்கள். எனவே, இந்த உரிச்சொல் என்னும் பெயர், தொல்காப்பியத்தில் உள்ள உரியியல் என்னும் பெயரிலிருந்து கடன் வாங்கப்பட்டதேயாகும். தொல்காப்பிய உரியியல், உரிச் சொற்கட்குப் பொருள் கூறுவதால் உரியியல் எனப்பெயர் பெற்றது; பிற்காலத்திலோ உரிச் சொல்லே யன்றி மற்ற சொற்கட்கும் பொருள் கூறும் நூற்களும் உரிச் சொல் என்னும் பெயர் பெற்றன; இது எது போன்றதெனின், எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்க்கு மட்டும் முதலில் பெயரா யிருந்த ‘எண்ணெய்’ என்னும் பெயர், பின்னர் மற்ற பொருள்களிலிருந்து எடுக்கப்பட்ட நெய் வகைக்கும் உரியதானது போன்றதாம். ‘உரிச்சொல்’ என்பதின் உண்மையான பெயர்க் காரணம் இதுவே. ஆனால் சிலர், ஒரு சொல்லுக்கு ‘உரிய’