பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

பொருள் தொகை நிகண்டு

இதன் ஆசிரியர் சுப்பிரமணிய பாரதி (தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் அல்லர்) இவர், புதுக்கோட் டைச் சீமையைச் சார்ந்த குடுமியாமலை என்னும் ஊரி னர்; வைத்தீசுர தீட்சதரின் குமாரர். இவரது காலம் பதினெட்டாம் நூற்ருண்டாக இருக்கலாம்.

பொருள் தொகை நிகண்டு என்னும் பெயரி லிருந்தே, இந்நூல் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியின் விரிவான மறு உருவம் என்பது புலப்படும்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் 1920-ஆம் ஆண்டில் ஆறணு விலையில் இந்நூலைப் பதிப்பித்துள்ளனர். திருவாவடுதுறை ஆதீனப் புலவரும் மதுரைத் தமிழ்ச் சங்கச் சைவ நூற் பரிசோதகருமாகிய சே. ரா. சுப்பிர மணியக் கவிராயர் திருத்தியும் விளக்கியும் கூட்டியும் இங்ங்கண்டுப் பதிப்பில் தம் கைவண்ணம் காட்டி யுள்ளதாகத் தெரிகிறது.

நூலாசிரியர் 878 நூற்பாக்கள் எழுதியிருக்க, அவற்ருேடு 122 நூற்பாக்கள் பின்னர் புதிதாக எழு திச் சேர்த்து 1000 நூற்பாக்களாகக் கணக்காக்கப் பட்டது என்று ஒரு சார் கொள்கையும், ஆசிரியர் 978 எழுத, பின்னர் 22 நூற்பாக்கள் சேர்க்கப்பட்டன என்று ஒரு சார் கொள்கையும் நிலவுகின்றன. இவற். றுள் எது உண்மையோ அல்லது இரண்டும் பொய்யோ!