பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 என்னும் கருத்தில், சாமிநாதம் என்னும் நூலின் பாயிரத்தில் உள்ள " அகத்தியனைச் சிவசுப்ர மணியனென ஈன்ற சாமி கவிராசன்” என்னும் பாடல் பகுதியை நோக்கின், சிவசுப்ரமணியக் கவிராயர் அகத்தியரைப் போலப் பரந்த புலமையும் தலைமையும் உடையவராய் விளங்கினர் என்பது புலப் படும். காலம் ஆசிரியர் பூவைப் புராணத்தைக் கொல்லம் 985 (கி. பி. 1810-ஆம் ஆண்டில் இயற்றியதாகக் கூறி யுள்ளமையால் இவரது காலம் 19-ஆம் நூற்ருண்டின் முற்பகுதி என்பது தெளிவு. மற்றும், நாமதீப நிகண்டைப் பூவைப் புராணத்துக்கு முன்பே ஆசிரியர் இயற்றியிருக்கவேண்டும். எனவே, பதினெட்டாம் நூற்ருண்டின் பிற்பகுதியையும் ஆசிரியர் தொட்டுக் கொண்டு இருந்திருக்க வேண்டும். நூல் அமைப்பு நிகண்டுத் தொகுதிகளின் முப்பெரும் பிரிவுகளுள் முதலாவதாகிய ஒரு பொருள் பல் பெயர்த் தொகுதி: என்னும் பிரிவைச் சார்ந்தது காமதீப நிகண்டு. அதாவது, ஒவ்வொரு பொருளுக்கும் எத்தனை பெயர்கள் உண்டோ அத்தனை பெயர்களையும் கூறுவது இங்கிகண்டு. இந்நூல் வெண்பா யாப்பில்ை ஆனது; பதினறு தொகுதிகளுடையது. பாயிரத்தில் எட்டுப் பாக்களும்