பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

349

நாகார்த்த தீபிகை நிகண்டு

காகா (நான) என்ருல் பல என்று பொருள்ாம்: காகாவிதமான (பலவிதமான) என்ற உலக வ்ழ்க்கை யும் காண்க. அர்த்தம் என்ருல் பொருள் என்று பொரு ளாம். நாகார்த்தம் (காகா-அர்த்தம்) என்ருல் பல பொருள் என்று பொருளாம். எனவே, காந்ார்த்த தீபிகை என்பது, சொற்கட்குப் பல் பொருள் விளக்கம் தரும் நிகண்டு என்பது பெறப்படும்.

ஆசிரியர் வரலாறு

ஆசிரியர் முத்துசாமி பிள்ளை என்னும் புலவர். இவர் திருநெல்வேலிக்காரர். இவர் மருகர் சுவாமிநாதப் பிள்ளை என்னும் தமிழறிஞர். மருகர் மாமனரின் நிகண்டைப் புகழ்ந்து ஒரு சிறப்புப்பாயிரம் எழுதி யுள்ளார். இந்நூல் கி. பி. 1850-ஆம் ஆண்டில் எழு தப்பட்டதாகத் தெரிவதால், ஆசிரியர் பத்தொன்பதாம் நூற்ருண்டினர் என்பது புலப்படும்.

நூல் அமைப்பு

இந்நூல் அரும் பொருள் விளக்க நிகண்டைப் பல வகையில் ஒத்துள்ளது; அதாவது, அது போலவே இஃதும் ஒரு சொல் பல் பொருட் பெயர்த்தொகுதி என் னும் இரண்டாவது பெரும்பிரிவைச் சேர்ந்தது; விருத்த யாப்பினுல் ஆனது. ககர எதுகைமுதல் னகர எதுகை ஈருக எதுகைமுறையில் பாகுபாடு செய்யப்பட்