பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350

350

டுள்ளது. இதன் எதுகை முறையமைப்பு மிகத் தெளிவாயுள்ளது. சொற்கட்கு முன்னல் வேண்டாத அடைமொழிச் சொற்கள் இங்கிகண்டில் இல்லை. ஆசிரி யர் முன்னேர் நிகண்டுகளிலுள்ள சொற்களோடு பல வடமொழித் திரிபுச் சொற்களுக்கும் இந்நூலில் பொருள் கூறியுள்ளார். அதனுல் இது பெருநூலாய்: விரிந்துள்ளது. மொத்தம் 1102 பாடல்கள் இதில் உள்ளன. 5452 சொற்கள் பொருள் விளக்கப்பட்டுள் ளன. இச்செய்திகளை நூலின் முகப்பில் ஆசிரியரே பாடிய தற்சிறப்புப் பாயிரத்திலுள்ள

' ககராதி னகாாவிறு எதுகை வைத்து....' “ வடநாற் சொல் செந்தமிழினும் பொருள்

தொடுத்துச் செயும் நாநார்த்த தீபிகை..." ' அடை சொற்கு அஞ்சிப் பற்பல .

விருத்தத் தானும் பகர்ந்த....” ' முன்னேர் பன்னூலிற் சில வெவ்வே றுரைத்த

வெலலாஞ் சேர்த்து ஒன்ருத் திரட்டி....... என்னும் பாடற் பகுதிகளால் அறியலாம்.

இந்நிகண்டிற்கு, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராயிருந்த உயர்திரு. சு. அனவரத விநாயகம் பிள்ளையவர்கள் சிறந்த உரை யெழுதியுள்ளார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தால், 1936-ஆம் ஆண்டில் இந்நூல் பதிப்பிக்கப் பெற்றது.