பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352

352

" நேர்செறி இளைஞர் ஒர்சொற்கு

ஒரு பொருள் நோாய் ஒரப் பார்செறி நிகண்டு சிந்தா

மணியெனப் பகர்வன் ஒன்றே.”

என்னும் பாயிரப் பாடலால் அறியலாம். இளைஞர்கள் புரிந்து கொள்வதற்காக இங்கிகண்டை இயற்றியதாக ஆசிரியர் பாயிரத்தில் கூறியிருப்பதிலிருந்து, அன்று கல்வித் துறையில் மொழிப்பயிற்சி இன்றியமையாத இடம் பெற்று மிகவும் கவனிக்கப்பட்டிருந்தது என்ப தும், எப்படியாவது நிகண்டுகளின் வாயிலாகச் சொற். பொருள்களை மாணவரின் உள்ளத்தில் திணித்துவிட வேண்டும் என்று கருதாமல், மாணவர்க்கு எளிதில் புரியக்கூடிய முறையில்-கன்கு பதியக் கூடிய வகை யில் நயமாகக்கல்வி புகட்ட வேண்டும் என்னும் உள நூல் முன்ற (Psychologiĉal Method) 316ši@ ற ஆசிரியர் களால் பின்பற்றப்பட்ட்து என்பதும் நன்கு விளங்கும்.

முன்னெழுந்துள்ள நிகண்டுகள் போலவே புது கிகண்டும் இருந்தால் அதனுல் ஒன்றும் பயன் இல்லை யல்லவா? எனவே, இந்நிகண்டின் ஆசிரியர் இதில் ஒரு புதுமையைக் கையாண்டுள்ளார். அதாவது, ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் தெரிந்து கொள்வது அப்புறம் இருக்கட்டும்: மாணவ இளைஞர்கள் முதலில் ஒரு சொல்லுக்கு உரிய முக்கியமான ஒரு பொருளைத் தெரிந்து கொள்ளட்டும்; பிறகு பல பொருள்களைப் பற்றிப் பார்த்துக்கொள்ளலாம் என்று, எளிமையி லிருந்து படிப்படியாக அருமைக்குச் செல்லுதல்’ என்னும் உளநூல் முறையை ஒட்டியவர் போல, ஆசிரியர் இங்கிகண்டில் 3000 (மூவாயிரம்) சொற்களை