பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

360

கூறியுள்ளார். புலத்தியனே கேள்' என்று அடிக் கடிப் புலத்திய முனிவனை விளித்துக் கூறுவதுபோல் நூல் அமைந்துள்ளது. பல சித்தர்களைப் பற்றியும், பல நிகண்டு நூற்களைப் பற்றியும், பல்வகைப் பொருள் களைப் பற்றியும் நூற்றுக் கணக்கில் - ஆயிரக்கணக் கில் - நூருயிரக் (இலட்சக்) கணக்கில் எண்ணிக்கை யிட்டு, படி மரக்கால் போட்டு அள அள என்று அளந்துகொண்டு போயிருக்கிருர் அகத்தியர் இக் நூலில்! அந்த இடங்களையெல்லாம் படிக்கும்போது, ஏதோ மாயா சாலக் கண்கட்டி வித்தை போல் தலை சுற்றுகிறது.

இந்நிகண்டு குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானல், கன்கு ஆய்ந்து ஒரு தனி நூலே எழுத வேண்டும். எனவே, நூலின் மாதிரிக்காக இரண்டு பாடல்களை மட்டும் பார்ப்போம் :

மூளையின் பெயர்

" முடியான அகாரமதின் முதற்கரு தானுகும் மூலவெளி சச்சிதா நந்தவெளி யாகும் அடியான படியாகும் பரவெளியு மாகும்

அந்தமெனும் ஞானவழி ஆகாய வெளிதான் குடியான மூலவெளி கைலைவெளி யாகும்

குருவிருப்பா ரண்டமெனும் அகண்ட மெனும்பெயர் செடியான பேரண்ட பேரொளி யென்றும் பெயர் செப்பினுேம் இந்தபடி சிரசதுவின் பெயரே.” முதல் காண்டத்திலுள்ள இப்பாடலில், மூளையைக் குறிக்கும் பல பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இன்னும் அடுத்தடுத்த பாடல்களில் மூளை பற்றியும் மூளைக்குள் இருப்பவை பற்றியும் கூறப்பட்டுள்ளன. இவையென்ன