பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

367

367

எரி பிறந்திடு நாள் நாவிதன் அங்கி

இருல் அளக்கு என்பர் கார்த்திகையே."

அடுத்து ஞாயிற்றின் (சூரியனுடைய) பெயர்களைக் குறிக்கும் பாடல்கள் வருமாறு:

“ பருதி ஆதித்தன் இமகான் பதங்கன் பனிப்பகை விண்மணி என்றுழ் அருணன் மார்த்தாண்டன் பாற்கரன் கதிரோன்

ஆயிரங் கதிரி நன்றபநன் இருள்வலி சண்டன் சூரியன் மித்திரன் எல்லை அம்போருக நண்பன் தருமொழி வேந்தன் சூரனே கவிதாத்

தரணிபன் சுடரவன் என்பார் ; ” " அனலியே பகலோன் வெய்யவன் பாதுமரி

அண்டயோநி ஏழ் பரியோன் கனலியே சான்ருேன் விலோசநன் மாவே

காலத்தை யளந்திட்டோன் இரவி இனவிரிச்சிகனே திவாகசன் ஒற்றை

யாழியன் அருணனே டுதயன் தினகரன் அருக்கன் ஞாயிறு பதங்கன் செப்பிய கிரண மாலியனே.” இவ்வாறு கால நிகண்டில் ஒவ்வொரு காலப் பொருட்கும் உரிய பல பெயர்களும் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

காரக நிகண்டு

காரகம் என்ருல், வினைமுதல்-செயல்தலைமைசெயல் உரிமை (காரகன் =செய்வோன்-இயற்று வோன்) என்று இவ்விடத்திற்குப் பொருள் பண்ணிக் கொள்ளலாம். இக்கிகண்டில் மேடம், இடபம், மிது கம் முதலியவற்றின் உருவங்களும், காரகங்களும்,