பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

379

379

அச்சிடப்பட்டது. இதன் இரண்டாம் தொகுதி

யாகிய பொருளகராதிமட்டும் திருச்சிற்றம்பல ஐயர்

என்னும் அறிஞரின் உதவியுடன் எல்லிஸ் (Ellis), என்னும் வெள்ளையரால் 1819-ஆம் ஆண்டில் பதிப் பிக்கப்பட்டது. பின்னர் நான்கு தொகுதிகளும்

கொண்ட நூல் முழுவதுமே, ரிச்சர்டு கிளர்க் (Richard Clarke) என்பவரின் ஆணைப்படி, தாண்டவராய முதலி யார், இராமச்சந்திரக் கவிராயர் ஆகியோரின் மேற் பார்வையில் 1842-ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 1835-ஆம் ஆண்டில் ரெவரன்ட் ஜே. ஸ்மித் (Rev.Smith) என்பவரால் வெளியிடப்பட்டது. பின் வந்த பதிப்பாசிரியர்கள், வீரமாமுனிவர் அமைத்த சொற்களுக்குமேலும் சில சொற்களைப் புதியனவாகச் சேர்த்துக் கொண்டதாகச்

சொல்லப்படுகிறது. மற்றும், ஆசிரியரால் ஒரு சொல் லுக்கு உரிய பொருள்களாகக் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களையும் பதிப்பாசிரியர்கள் அகரவரிசைப்படுத்தி யிருப்பதாகத் தெரிகிறது.

இந்த அகராதியின் மாதிரிக்காக, தாரம், ஊர்தி என்னும் இரு சொற்கட்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொருள்கள் வருமாறு :

தாரம் = அரும்பண்டம், நாக்கு, மனைவி, உச்சவிசை, பொன், மூக்காற் பாடு மிசை, யாழ் நாம்பிலொன்று, விண் மீன், வெள்ளி, வெண்கலம். நல்ல பணியாரம், வில், ஒசை,

கண்.

ஊர்தி = எருது, குதிரை, சிவிகை, தேர் யானை, பண்டி முதலிய வாகனங்கள், வினைமுற்று.

24